October 23, 2012

ஒன் லைனர்கள்- கடுகு

 ( உன் லைனர் என்பதைத் தப்பாக அடித்துவிட்டதாகக் கருத வேண்டாம்!)
ஆங்கிலத்தில் நகைச்சுவை வகைகளில் ஒன் லைனர்  (ONE-LINER) ஜோக்குகள் ஒரு முக்கிய வகை. பல வருஷங்களாக இவைகளைப் படித்துத் திரட்டி வருகிறேன்

தி கிங்க் ஆஃப் ஒன் லைனர்ஸ் (KING OF ONE-LINERS)) என்ற பட்டப் பெயரைப் பெற்ற காமெடியன் ஹென்னி யங்மென் (HENNY YOUNGMAN)  எழுதிய "10,000 ஒன்-லைனர்கள்" என்ற புத்தகத்தை சமீபத்தில் வாங்கினேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ( பின்னால் ஒரு பதிவில் அவரது  ஒன் லைனர்கள் 10, 20-ஐ எடுத்துப் போடுகிறேன்.) இந்த மாதிரி நாமும் சில ஒன்-லைனர்களைத்  தமிழில் போடலாம் என்று தோன்றியது.

 நான் ஒரு  நகைச்சுவையாளன் (நிஜமாகவா?) என்பதால் மட்டுமல்ல, நானும் ஒரு யங்க் மேன்  (அட, அப்படியா!) என்பதாலும்!

++          ++            + +        
-- அவனுக்கு ரெட்டை நாக்கு. அவன் பேசினால் ஸ்டீரியோவாக வார்த்தைகள் கேட்கும்!

--காம்பவுண்ட் சுவர் இல்லாவிட்டால்   பல திருமதிகளால்  வீண் அரட்டை அடிக்க முடியாது.

-- எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்காத விஷயம் தலைப்பு: என் கதைகளின் தலைப்பு அவளுக்கும், அவள் புடவையின் தலைப்பு எனக்கும்!

-- இந்த காலத்துக் குழந்தைகள் அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டே இருப்பதில்லை; காரணம் அம்மாதான் சல்வார்- கமீசுக்கு மாறி விட்டாளே!

- காலில் கொதிக்கிற  வெந்நீரைக் கொட்டிக்கொண்டு ஓடினால் அதுதான் பாலே’ நடனம்.

-- ஹஸ்பண்ட் என்ற ஆங்கில வார்த்தையை    HUS-BEND என்று எழுதலாம் - வளைந்து கொடுக்கும் கணவன்மார்களைக் குறிப்பிட!

- ஹஸ்பண்ட் என்ற ஆங்கில வார்த்தையை   ஹஷ்- பந்த் ( HUSH-BANDH) என்று எழுதலாம் - வாயைத் திறக்கப் பயப்படும்  கணவன்மார்களைக் குறிப்பிட.

-- கட்டடக் கலைப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை -மனக்கோட்டை கட்டுவதற்கு .

-- எந்த நோய்க்கும் மருந்து சொல்வேன், நோயாளி பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தால் !

--துவரம் பருப்பு விலை கிலோ  100  ஆகும்போது, அதைத் துயரம் பருப்பு என்று சொல்வது தான் சரி!

 --சில அலுவகங்களில் உங்கள் வேலை ஆவதற்கு  WAIT  பண்ண வேண்டும் அல்லது  WEIGHT  வைக்கவேண்டும்.

-- சிலர் எத்தனை வயாதானாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் -- ஜொள்ளு விடுவதில்.

-- ”என் மூளை கெட்டு போச்சு” என்று  சொல்பவர்களிடம் ஒரு கேள்வி: இதை தெரிவித்தது உங்கள் மூளைதானே?

-- சில திரைப்படங்களில் கதை இருக்கும்: சிலவற்றில் கதை விட்டிருப்பார்கள்.

-- பணம் செலவில்லாமல் வாங்கக்கூடியது: காற்று, கடன், உதை!

-- வீட்டுக்கு வீடு மாதக் கடைசி தேதி வித்தியாசமாக இருக்கும்.

-- இருமல் வருபவர்கள் மருத்துவசாலைக்குப் போவார்கள் அல்லது இசைக் கச்சேரிக்குப் போவார்கள்!

-- பீட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டு பலர் பிரார்த்தனை செய்வார்கள் - பீட்ஸா வருவதற்கு அரைமணி மேல்  தாமதம் ஆக வேண்டும் என்று!

-- பிள்ளையார் கோவிலில் சிலர் குண்டு கொழுக்கட்டை வைத்து வணங்குவார்கள்: வேறு சிலர் குண்டு கொழுக்கட்டையாகவே வணங்குவார்கள்!

7 comments:

  1. ஒன் லைனர்களுக்கு ஒரே வார்த்தையில் ‘ஆஹா’

    ReplyDelete
  2. Music concerts: 'Speakers' (with neighbour seat mami's) also attend!

    None can accuse me of plagiarising his story - my film has no story.

    Eagerly await you to post 10 - 20 0f the 10000 one liners. See how you make it so simple for us!

    -R. J.

    ReplyDelete
  3. எல்லாமே அருமை. தொடரட்டும் ஒன் லைனர்ஸ்...

    ReplyDelete
  4. எல்லாமே ஏ-ஒன்!
    கபாலி

    ReplyDelete
  5. அட... இந்நாளில் ட்வீட்டுகள் என்று எழுதப்படுபவற்றை விட அளவில் குறைவாகவும் சுறுசுறுவென்றும் இருக்கிறதே. அருமை. தொடருங்கள். எனக்கும இதுபோன்று சில எழுதிப் பார்க்கலாமா என்று (விபரீத) ஆசை வந்துவிட்டது ஐயா.

    ReplyDelete
  6. அரியர்ஸ், நமக்கு வந்தால் ஆனந்தம்!

    நம் பிள்ளைகளுக்கு வந்தால் கஷ்டம் !!

    ஆனந்த விகடனில் வந்த அடியேனின்

    ட்விட் இது !

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!