July 31, 2011

கூகுளாண்டவர்

கூகுளாண்டவர் என்ற பெயரை யார் யோசித்துக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பெயர் மிகவும் பொருத்தமானதுதான் என்பது என் அபிப்பிராயம்.
கடவுளுக்கு மூன்று சிறப்பு உண்டு.என்று MORAL STUDIES -வகுப்பில்  படித்திருக்கிறேன்.
அவை -OMNIPOTENT, OMNISCIENT மற்றும் OMNIPRESENT  என்று விளக்கப்பட்டது. அதாவது அவர் சர்வ வல்லமை படைத்தவர், சர்வ வியாபி, மற்றும் அனைத்தையும் அறிந்தவர். 
கூகுளாண்டவரருக்கும் இந்த மூன்று திறமையும் இருக்கிறது.
அலாஸ்காவாக இருந்தாலும் அய்யம்பேட்டையாக இருந்தாலும் இந்த ஆண்டவரைத் தரிசிக்க முடியும்.. ( சர்வ வியாபி!)
கோடிக்கணக்கான கோப்புகளிலிருந்து நாம் தேடும் தகவலைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் சர்வ வல்லமை படைத்தவர்..
நாம் எந்தெந்தவிஷயங்களைத் தேடினோம், எங்கு நுழைந்து எங்கு வெளியே வந்தோம் எனபவை போன்ற தகவல்களை அறிந்து வைத்திருப்பதுடன் தன் நினைவிலும் வைத்திருப்பார்!. (சர்வ ஞானி))
கூகுளாண்டவர் அவதாரம் எடுத்தபின் பல சிறு தேவதைகள் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டன.
அகராதி தேவதை, கலைக்களஞ்சிய காவல் தெய்வம், பொது அறிவு பகவான் தெஸாரஸ் ஈஸ்வரன்  போன்ற பலருக்கு மௌஸ் (!) போய்விட்டது!
பின்குறிப்பு -1 கூகுளாண்டவர்  பற்றிய ஒரு ஆன்மீகக் கட்டுரையை யாராவது எழுதி இருக்கிறார்களா? தல வரலாறு? கூகுளாண்டவர் பதிகம்? அகவல்?

பின்குறிப்பு -2 : இதை எழுதும்போதுஎன்சைக்ளோபீடியா பிரிட்டனிகாவைப் பற்றி  நான் படித்த சில சுவையான தகவல்கள் நினவுக்கு வந்தன. அவற்றைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

July 30, 2011

கலியுக வேதம் பிரிட்டானிகா


என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை  கலியுக வேதம் என்று ஒரு காலத்தில் சொல்வதுண்டு . அந்தக் கலைக்களஞ்சியத்தைக் கண்ணால் பார்த்தது நான் டில்லி சென்ற பிறகுதான். அதிர்ஷ்டவசமாக  என் அலுவலகத்திற்கு நாலு கட்டடம் தள்ளி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. அங்கு போய் படிப்பேன். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அங்கு  சுவையான தகவல்கள் இருக்கும்மொத்த பிரிட்டனிகாவையும் படிக்கலாம் என்று ஒரு சமயம் யோசித்தேன்எழுத்துப் பணி, புத்தகம் படிக்கும் ஆர்வம்,, மொழிபெயர்ப்பு வேலை, டில்லி அமெச்சூர் நாடகங்களில் பங்கு என்று பலவற்றிற்கு நேரம் போதாமல் இருந்ததால் இந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மேலும் அப்படி படித்திருந்தாலும்  90 பங்கு விஷயங்கள் என் மூளைக்கு எட்டியிருக்காது. ஆகவே. படிக்கவில்லை. .

(சமீப காலத்தில்,பிரிட்டனிகாவை  இரண்டு செட்களாகப் பிரசுரிக்கிறார்கள் :  1. மைக்ரோ செட்,2. மேக்ரோ செட். மைக்ரோ செட்டில் கட்டுரைகள் சுருக்கமாக இருக்கும். விவரமான கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் மேக்ரோ செட்டிற்குப் போகவேண்டும்.)

சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். என்சைக்ளோபீடியா பிரிட்டனிகாவை முழுதுமாகப் படித்தவர் எழுதியது. படித்து  கொண்டிருக்கும் போதே. அவ்வப்போது  தன் கருத்துகளுடன் சேர்த்து   எழுதியது. புத்தகம்:  THE KNOW IT ALL--by  A J JACOBS.  இவர் ESQUIRE  பத்திரிகையின் ஆசிரியர்மொத்தம் 33000 பக்கங்களைப் படித்திருக்கிறார் (ராம்!). (புத்தகம் சுமார்தான்!)

அதிலிருந்து திரட்டிய ஒரு சில தகவல்களைத் தருகிறேன்.

* உலகிலேயே மிகப் பெரிய கலைக்களஞ்சியம்: சைனாவின் யூ- ஹை தான். 1738-ல் தயாரிக்கப்பட்ட இது 240 வால்யூம்களைக் கொண்டது.

* பிரான்சில் 1245-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட  கலைக்களஞ்சிய கட்டுரைகள் எல்லாம் கவிதைகளாக எழுதப்பட்டிருக்கிறதாம்!

*பிரிட்டானிகாவின் முதல் பதிப்பு 1768-ம் ஆண்டு பிரசுரமாயிற்று. மொத்தம் மூன்றே வால்யூம்கள்! முதல் பதிப்பில் நாடகங்கள் பற்றிய கட்டுரைக்கு ஏழே வரிகள்தான்.கவிதைகள் பற்றிய கட்டுரைக்கு  500 வார்த்தைகள்தான். அதே சமயம் குதிரை நோய்களைப் பற்றிய கட்டுரை 39 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது!

* முதல் வால்யூமில்   A மற்றும் B எழுத்தில் துவங்கும் விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள் இருந்தன. C முதல் Z வரை உள்ள எல்லா எழுத்துகளுக்கும்: மற்ற இரண்டு வால்யூம்கள்! அவ்வளவுதான்! (ஆதாரம்:  HERMAN KOGAN எழுதிய  THE GREAT EB)

*1768-ம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு இப்போது விலைக்குக் கிடைக்கிறது 135 டாலர்! முதல் பதிப்பைப் போலவே அச்சு, காகிதம், படங்கள், பைண்டிங். எல்லா அச்சு அசலாக உருவாக்கி இருக்கிறார்கள்.

* புகழ் பெற்ற பார்னம் பெய்லி சர்க்கஸை உருவாக்கிய பி டி பார்னம் 81-வது வயதில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தபோது, அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அவரைப் பற்றிய இரங்கல் செய்தியை ஒரு பத்திரிகை முன்னதாகவே  வெளியிட்டது.

* உலகின் மிகப்புகழ் பெற்ற உரைகளுள் ஒன்று: ஆபிரகாம் லிங்கன்  1863 நவம்பர் 19-ம் தேதி கெட்டிஸ்பர்க் போர்க்களத்தில் நிகழ்த்திய உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவு.  Four score and seven years ago our fathers brought forth on this continent, a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal.... .என்று துவங்கும் உரைஅதை நிகழ்த்த லிங்கன் எடுத்துக் கொண்ட நேரம் 5 நிமிடங்கள்.

லிங்கன் பேசுவதற்கு முன்பு  பேசியவர் EDWARD EVERETTE  என்ற பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட்  பல்கலைக்கழகத்தின் தலைவர். இவர் பெயர் பெற்ற சொற்பொழிவாளர். இவர் இரண்டு மணி நேரம் பேசினாராம்.

ஆனால் லிங்கனின் ஐந்து நிமிஷ உரை எவரெட்டின் உரையைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது! லிங்கனின் உரைஆங்கில மொழி உள்ளவரை இருக்கும்.
பாவம் எவரெட்!

(தேவை இல்லாத பின்குறிப்பு: இரண்டு வருஷங்களுக்கு முன்பு, கெட்டிஸ்பர்க்   போர்க்களத்தில் லிங்கன் உரை நிகழ்த்திய  இடத்தைப் போய்ப் பார்த்தேன். அந்த அற்புத உரையை அங்கு நின்று நிதானமாகப் படித்து  விட்டு வந்தேன்!)

July 25, 2011

தொடுத்த மலர்கள்.

நான் வார்த்தைகளின் காதலன்.  அழகான கருத்துகளை அழகான  முறையில் அழகான   வார்த்தைகளைக் கொண்டு தொடுக்கப்படும்  கவிதைகளையும்  பொன்மொழிகளையும் படிக்க எனக்கு ஆர்வம் உண்டு.. தமிழ், ஆங்கில பாடல்களிலும்  இலக்கியங்களிலும்   உள்ள அழகை ரசிப்பவன். பலவற்றைப் பல நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொள்வேன். சமீபத்தில் ஒரு  புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு அழகான பொன்மொழி கண்ணில் பட்டது:

சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு,   பிரஞ்சு எழுத்தாளர் Montaigne எழுதியது. இவரது புத்தகங்கள் 75  மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனவாம்.

அவர் எழுதிய  ஒரு அழகிய கருத்தைப் பாருங்கள்.

I have gathered a posie* of other men's flowers,
and nothing but the thread that binds them is my own.--Montaigne, 1533-1592

*a small bunch of flowers


 அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!

*               *                        *           
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால்,  என் வலைப்பூவிற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தேன். ”படித்ததில் பிடித்தது”, ”பலசரக்கு”, ’அஞ்சறைப் பெட்டி”, ”சரடு”, ” தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல்”, ”கதம்பம்”, ”மஞ்சரி”, ”நான் நெய்தது” என்றெல்லாம்   யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையை  அப்போதுப் படித்திருக்கவில்லை. படித்திருந்தால் தொடுத்த மலர்கள் என்று பெயர் வைத்திருப்பேன்.

தொடுத்த மலர்கள் - நான் நார்!

நான் வார்த்தைகளின் காதலன்.  அழகான கருத்துகளை அழகான  முறையில் அழகான   வார்த்தைகளைக் கொண்டு தொடுக்கப்படும்  கவிதைகளையும்   பொன்மொழிகளைம் படிக்க எனக்கு ஆர்வம் உண்டு.. தமிழ், ஆங்கில பாடல்களிலும்  இலக்கியங்களிலும்   உள்ள அழகை ரசிப்பவன். பலவற்றை என் நோட்டுப்புத்தகஙகளில் எழுதிக் கொள்வேன். சமீபத்தில் ஒரு  பத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு அழகான பொன்மொழி கண்ணில் பட்டது:
சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு,   பிரஞ்சு எழுத்தாளர் Montaigne எழுதியது. இவரது புத்தகங்கள் 75  மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளனவாம்.
அவர் எழுதிய  ஒரு அழகிய கருத்தைப் பாருங்கள். 
I have gathered a posie of other men's flowers, 
and nothing but the thread that binds them is my own.
--Montaigne, 1533-1592
*a small bunch of flowers 

 அடாட,என்ன நயம்! என்ன அடக்கம்!
*               *                        *            
தாளிப்பு என்ற பெயரை வைப்பதற்கு முன்னால்,  படித்ததில் பிடித்தது, பலசரக்கு, அஞ்சறைப் பெட்டி, சரடு,  தேங்காய்- மாங்காய்- பட்டாணி,-சுண்டல், கதம்பம், மஞ்சரி, நான் நெய்தது என்றெல்லாம்   யோசித்தேன் அப்போது இந்தக் கவிதையைப் படிக்கவில்லை. படித்திருந்தால்
தொடுத்த மலர்கள் என்று பெயர் வைத்திருப்பேன்.