November 14, 2012

ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!


ஒரு மனிதர்:16000 புத்தகங்கள்!

நான் கல்லூரியில் படித்த போது, லிங்கன் வரலாறு துணைபாடமாக வைத்திருந்ததை எனக்குக் கிடைத்த பரிசாக இன்றும் கருதுகிறேன். அந்த புத்தகத்தை பரீட்சைக்காகப் படித்த போதிலும் அவரது வாழ்க்கைப் பலவிதத்தில் எனக்குள் சிறந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பது நிஜம்.


கெட்டிஸ்பர்க் போர்க்கள மைதானத்தில் 1863 நவம்பர் 19-ம் தேதி அவர் நிகழ்த்திய அற்புதமான உரை ஆங்கில தெரிந்த அனைவரும் படித்து ரசித்து மனப்பாடம் செய்ய வேண்டிய உரை என்பேன். என் வீட்டுக் கூடத்தில் எட்டுக்கு ஆறு அடி அளவு பேப்பரில் பெரிய எழுத்தில் உரையை எழுதி ஒட்டி வைத்திருந்தேன். பாரதியாரின் கவிதையைப் படிப்பது போல, பல தடவை படித்துப் படித்து மெய் மறந்திருக்கிறேன். இந்த பதிவின் முடிவில் உரையைத் தருகிறேன். 

சில வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்த போது கெட்டிஸ்பர்க் போய்  போர்க்கள மைதானத்தைப் பார்த்து
வந்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம். அதை ஒரு சுற்றுலா இடமாகப் பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள்.
 வழிகாட்டி இளைஞர்கள், அந்தக்கால போர்க்கள தளபதிகள் மாதிரி உடை அணிந்து விளக்கினார்கள். இடை இடையே கதாபாத்திரங்களாக மாறி உணர்ச்சிப் பெருக்குடன் பேசி நடித்தார்கள். (அந்த வழிகாட்டிகள் கல்லூரியில் சரித்திரம் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள். சிலர் ஆசிரியர்கள். கோடை விடுமுறைகளில் இப்படி பணியாற்ற அவர்கள் அமர்த்தப்படுகிறார்கள்.)
 *                  *

கெட்டிஸ்பர்க்கில் லிங்கனின் உரையைக் கல்லில் பொளிந்து வைத்திருக்கிறார்கள். அதைப் படிக்கப் படிக்க உடலில் புது ரத்தம் பாய்ந்தது.
அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியான ஆபிரஹாம் லிங்கன்  காலத்தால் அழியாத புகழ் பெற்றவர். ஒரு விதத்தில் அவர் அமெரிக்காவின் ‘மகாத்மா காந்தி’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  இல்லை.. இல்லை. இது சரியில்லை. காரணம், நாம் மகாத்மா காந்தியைக் கிட்டத்தட்ட மறந்து விட்டோம். ஆனால் அமெரிக்க மக்கள் லிங்கனை மறக்கவில்லை. அவரைப் பற்றிப் புத்தகங்களாக எழுதித் தள்ளுகிறார்கள். நம்ப மாட்டீர்கள், இது வரை அவர் சம்பந்தமாக 16000, ஆம்,பதினாறாயிரம் புத்தகங்கள்  வெளி வந்துள்ளன. அச்சில் 20 புத்தகங்கள் இருக்கின்றனவாம்,.

இந்த  மாதம்  VAN DRREBLE என்பவர் எழுதியுள்ள ஒரு பத்தகம் வெளியாகிறது, ஒரு லட்சம் காபிகள் அச்சிடுகிறார்கள்.  லிங்கன் வரலாறு கிட்டதட்ட ஒரு ‘பொன்னியின் செல்வன்’. லிங்கன் ஆராய்ச்சியாளரான டேவிட் ஹெர்பர்ட் டொனால்ட் எழுதிய லிங்கன் புத்தகம் 1995’ல் பிரசுரிக்கப்பட்டது. இது வரை ஒரு லட்சம் காபிகள் விற்றிருக்கின்றன. மற்றோர் 1 லட்சம் புத்தகம்: 2008-ல் வெளியான ஜேம்ஸ் மெக்ஃபெர்ஸன் எழுதிய  Abraham Lincoln as Commander in chief’ என்ற புத்தகம்.   James Swanson-னின்  MAN HUNT-12 day chase for Licoln Killers அசத்தல் விற்பனயாக 
3,75,000 காபிகள் விற்றிருக்கிறது.!
 எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு இருப்பது TEAM OF RIVALS என்ற புத்தகம் 2005- வெளியாயிற்று. இது வரை 13 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி இருக்கிறது. ( இவையெல்லம் ஆதார பூர்வமானத் தகவல்கள்.)


லிங்கனின் 200-வது ஆண்டு நினைவாக, யாருமே எண்ணி பார்த்திராத ஒரு புதுமையை வாஷிங்டனில் உள்ள  FORD’S THEATRE CENTRE-ல் செய்திருக்கிறார்கள்.
 
லிங்கன் புத்தகத்தூண் அமைத்திருக்கிறர்கள். உயரம்: 34 அடி! 

லிங்கன் புத்தகங்களை எல்லாம் திரட்டி, தூண் அமைக்கத் திட்டமிட்டார்கள். கிட்டத்தட்ட 7000 புத்தகங்கள் தான் கிடைத்தனவாம். ஒவ்வொரு புத்தகத்தையும் அச்சு அசலாக அலுமினிய தகடில் செய்து, அட்டைப்படத்தை  அச்சடித்து. அவற்றை அடுக்கி  வெல்டிங்க் செய்து உருவாக்கி இருக்கிறார்கள். (மீதி 9000 புத்தகங்கள் கிடைத்ததும் இன்னொரு தூண் எழுப்புவார்களோ என்னவோ!)

புத்தகத்தூண் படத்தைப் பாருங்கள்.
====================
சில புள்ளி விவரங்கள்.
லிங்கன் பற்றிய புத்தகங்கள்: 16000 (உத்தேச எண்ணிக்கை)
அவரது வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் மட்டும் : 5796
லின்கன் ஆராய்ச்சியாளர்  HAROLD HOLZER மட்டும் 42 புத்தகங்கள் எழுதி/எடிட் பண்ணி உள்ளார்.
 ==================


இந்த மாதம்  லிங்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகிறது.  உருவாக்கியவர்: ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!
DORIS KEARNS GGODWIN   எழுதிய  900 பக்க புத்தகத்தைத் தழுவி எடுத்திருக்கிறார்.

ெட்டிஸ்பர்க் உரை


 Four score and seven years ago our fathers brought forth on this continent, a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal. 


Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure. We are met on a great battle-field of that war. We have come to dedicate a portion of that field, as a final resting place for those who here gave their lives that that nation might live. It is altogether fitting and proper that we should do this.

But, in a larger sense, we can not dedicate -- we can not consecrate -- we can not hallow -- this ground. The brave men, living and dead, who struggled here, have consecrated it, far above our poor power to add or detract. The world will little note, nor long remember what we say here, but it can never forget what they did here. It is for us the living, rather, to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us -- that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion -- that we here highly resolve that these dead shall not have died in vain -- that this nation, under God, shall have a new birth of freedom -- and that government of the people, by the people, for the people, shall not perish from the earth.

இந்த உரையைப் பற்றி ஒரு சுவையான தகவல்  உள்ளது.
அதை நிகழ்த்த லிங்கன் எடுத்துக் கொண்ட நேரம் 5 நிமிடங்களுக்கும் குறைவு.


லிங்கன் பேசுவதற்கு முன்பு  பேசியவர் EDWARD EVERETTE  என்ற பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட்  பல்கலைக்கழகத்தின் தலைவர். இவர் பெயர் பெற்ற சொற்பொழிவாளர். இவர் இரண்டு மணி நேரம் பேசினாராம்.

ஆனால் லிங்கனின் ஐந்து நிமிஷ உரை, எவரெட்டின் உரையைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டதுபின்னால் லிங்கனுக்கு எவெரெட், ஒரு கடிதம் எழுதினார்.  "I should be glad if I could flatter myself that I came as near to the central idea of the occasion, in two hours, as you did in two minutes." என்று எழுதினார்.
இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது TEAM OF RIVALS  புத்தகத்தை வாங்கினேன். மேலெழுந்தவாரியாகப்  பார்த்தேன்..அந்தப் புத்தகத்திலிருந்து கெட்டிஸ்பர்க் உரையைப் பற்றிய இரண்டு வரிகளைத் தருகிறேன்:

Lincoln has translated  the story of his country and the meaன்ing of the war into words and ideas accessible to every American.......had forged for his country an ideal of its past, present, and future that would be recited and memorized by students forever."


லிங்கனின் உரைஆங்கில மொழி உள்ளவரை இருக்கும்.

7 comments:

  1. நல்ல பகிர்வு... புதிய தகவல்கள்... நன்றி...

    ReplyDelete
  2. right on time for the Spielberg movie.

    ReplyDelete
  3. In Ashok Leyland, Communication skills development training programs, this speech and Nehru's speech in court (before independence) were often presented by faculties, to us.

    ReplyDelete
  4. வரலாற்றின் தூணாக இருந்த ஆப்ரஹாம் லிங்கனுக்கு எத்தனை தூண்களை வேண்டுமானாலும் நிறுவலாம்தானே! இத்தனை விவரங்கள் அடங்கிய ஸ்பெஷல் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. பிரமிக்கவும் வைக்கிறது.. பெருமூச்சும் கூடவே,

    ReplyDelete
  6. ஆஹா! மிக மிக அற்புதமான பதிவு, இன்று இந்த பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். சூப்பர்.

    நிறைய எழுதி இருக்கீங்க இதுநாள்வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இதோ இப்போது முதல் உங்களை பின்தொடர்ந்து வந்து முடிந்தவரை படிக்கிறேன்.

    உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.
    http://semmalai.blogspot.com/

    ReplyDelete
  7. நன்றி.
    பார்க்கிறேன்.
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!