May 30, 2013

நாலு விஷயங்கள் - கடுகு


1. ஐயோ வேண்டாம் டீ! 
---- கமல் கொடுத்த குரல்!

டில்லியில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு எனக்கு அழைப்பு கிடைக்கும். 15 நாள் விழாநாள் ஒன்றுக்கு விஞ்ஞான் பவன் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 5,6 படங்கள் திரையிடப்படும். நிறையத் திரை  உலகப் பிரமுகர்களையும் சந்திக்க முடியும்.இந்த   விழாக்களுக்கு கமல்ஹாஸன்  வருவது உண்டு.

ஒரு திரைப்பட விழாவின் சிறப்புக் காட்சி, டில்லி கன்னாட் பிளேஸில் இருக்கும்  பிளாஸா தியேட்டரில்  திரையிடப்பட்டதுபடத்தைப் பார்க்க கமல் வந்திருந்தார். நானும் போயிருந்தேன்.

பக்கத்துப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது ஒரு கலைப் படம்போதாதற்குசுரத்தில்லாத வாழ்க்கைஎன்பது  போன்ற தலைப்பு. படம் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

May 23, 2013

கமலாவின் கணக்கு வழக்கு -கடுகு

கமலாவின் கணக்கு வழக்கு
அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் மொபைல் என்ற நகரின் PRESS-REGISTER  என்ற  பத்திரிகையில்   S L VARNADO என்பவர் எழுதி இருந்த ஒரு கட்டுரை என்  கண்ணில் பட்டது. நல்ல நகைச்சுவையுடன் இருந்தது. அந்த பத்திரிகையில் அதற்கு முன்பு அவர் எழுதி இருந்த வேறு சில கட்டுரைகளையும்  படித்தேன், எல்லாம் எளிமையான நகைச்சுவை. எனக்குப் பிடித்த டைப்!
அதில் வந்த ஒரு கட்டுரை”  MY WIFE'S MEASUREMENT SYSTEM. ( 'என் மனைவியின் கணக்கு முறைகள்!” என்று  சுமாராக மொழிபெயர்க்கலாம்.)
அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் தழுவி,  சொந்த  மசாலாவை  நிறையத் தூவி  இங்கு தமிழில் தருகிறேன்.                                       ------------------------------
கமலாவின் கணக்கு வழக்கு
கமலாவை நான் கலியாணம் பண்ணிக் கொண்டு  ஐம்பது வருஷம் ஆகிவிட்டது. ( யாரங்கே பெருமூச்சு விடுவது? விடவேண்டியவன் நானே கஷ்டப்பட்டு பெருமூச்சு விடாமல் இருக்கிறேன்!)

இந்த ஐம்பது வருஷங்களில் கமலாவிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம், அதில் முக்கியமானது ஒன்று..... கமலாவின் சில நடவடிக்கைகளுக்கு ஏன், எதற்கு என்று விளக்கம் கேட்கக்கூடாது!  கணவன் என்பவன் நாயகனாக இருக்கலாம்;  கேள்வியின் நாயகனாக இருக்கக்கூடாது!
உதாராணத்திற்கு, எ ன் அருமை மனைவி பின்பற்றும் அளவு முறைகளைப் பற்றிச் சொல்கிறேன்.
ஒரு நாள் ஆபீசிலிருந்து வீடு திரும்புகிறேன். வீட்டுக்குள் நுழைகிறேன். கமலா டைனிங் மேஜையின் கீழ் பூனைக்குட்டி மாதிரி போய்க் கொண்டிருக்கிறாள்.

தவழ்ந்து போய்க் கொண்டிருந்தாள் என்று கூட சொல்லலாம். அவளுக்குக் குழந்தை மனசு என்று என் மாமியார் அடிக்கடி கூறுவாள். சில சமயம் “ ஏண்டி குழந்தை!” என்றும் அழைப்பாள். அதனால்  தவழ்கிறாளோ என்று ஒரு கணம் எண்ணினேன்.
” கமலா.. மேஜையின் கீழே என்ன செய்து கொண்டிருக்கிறாய்  என்று  என்னிடம் சொல்லலாமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.
“மேஜையை அளக்கிறேன், இந்த மேஜைக்கு புதுசாக டேபிள்-கிளாத் வாங்கப் போறேன். அதுக்காகத்தான்.” என்றாள்.
“ சரி. அதுக்கு எதுக்கு  முழம் போட்டுகொண்டு , ஏதோ பண்ணிக் கொண்டு இருக்கியே... இன்ச் டேப் எடுத்து அளக்க வேண்டியதுதானே?” என்று கேட்டேன்.

“ மேஜையின் நீள அகலத்தைமுதலில் எடுத்துக் கொண்டு தானே அதுக்கு ஏத்த மாதிரி டேபிள்- கிளாத்  வாங்க வேண்டும். இதோ  பாருங்கோ.” என்று சொல்லி ஒரு துண்டு பேப்பரைக் கொடுத்தாள்.

May 18, 2013

sound of music நையாண்டிகள்

Sound of music  நையாண்டிகள் 


பிரபலமான பாடல்களையும் அதே ட்யூனில் கிட்டதட்ட அதே மாதிரி வார்த்தைகளைப் போட்டு, நையாண்டி பாடல்கள் எழுதுவது எல்லா நாட்டிலுமம் மொழியிலும் உண்டு.  SOUND OF MUSIC  பாடல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்பே ஒரு பதிவில் போட்டிருக்கிறேன்.
சமீபத்தில்    NEW YORK TIMES   தினசரியின் பழைய இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ’வார இறுதி வார்த்தை விளையாட்டு’ என்ற சுவையான பகுதி கண்ணில் பட்டது. சுமார் 100 வாரங்கள் வந்திருந்தது.
அதில்  ஒரு வாரம் SOUND OF MUSIC  படத்தில் வந்த - These are a few of my favorite things பாடலைப் பின்பற்றி  எழுதச் சொல்லி இருந்தார்கள்.  2 25 பேர் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.




இதுதான் படத்தில் வந்த பாடல். 
YOU TUBEல்  பாடலைக் கேட்க இங்கு கிளிக் செய்யவும்.  கேட்டு விட்டு மீதியைப் படியுங்கள். நன்கு ரசிக்க முடியும்

 Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things

Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
     These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things

When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad


.===============
 1.
Wet snow for packing in snowballs and tossing
Clean snow that covers the world in white frosting
Powder for sledding fast as you can go
These are a few of the good types of snow
When the cars turn
All the snow gray
And it turns to slush
I simply remember it might snow again
And then I don't mind so much.
2
Letters in longhand and faces not lifted,
Children just pleasantly bright, but not "gifted,"
Cell phones quite tuneless with old-fashioned rings:
These are a few of my favorite things.
Hot dogs from street carts and sesame noodles,
Unbottled water and unsculpted poodles,
Taxis sans TVs with strong back seat springs:
These are a few of my favorite things.
When the car stalls; when the train's late--
When I feel annoyed,
I simply remember my favorite thing:
It's that I'm not unemployed!

May 12, 2013

ஆசிரியர் சாவி - காட்டூனிஸ்ட் நடனம்



அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை 2013 ஆண்டுக்கான நகைச்சுவைப் பதக்கத்தை கார்ட்டூனிஸ்ட் நடனம் அவர்களுக்கு அளித்துக் கௌரவித்தது..
அத்துடன் சாவி இரண்டாம் நினைவு சொற்பொழிவையும் நடத்தியது. இந்த பதிவில் நடனம் அவர்களைப் பற்றியும் சாவி அவர்களைப் பற்றியும் சிறு குறிப்புகள்!

சாவி
ஆசிரியர் சாவி அழகான நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எப்போதும் எதையும் வித்தியாசமாகச் செய்ய ஆசைப்படும் அவர், தன் நாய்க்கு முனிர் என்று பெயர் வைத்திருந்தார், ( மரியாதைக்குரிய முனியசாமி??)
ஒரு சமயம் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்கு காலை வேளை போயிருந்தேன். அவருடைய அறையில், தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது பக்கத்து அறையிலிருந்த முனிர் வாலை ஆட்டிக் கொண்டு உள்ளே வந்தது, அதைச் செல்லமாகத் தடவியபடியே என்னிடம் சொன்னார்: பாருங்களேன்.. இப்ப உங்களுக்கு ஒரு வேடிக்கைக் காட்டப் போகிறேன். ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருங்கள்”: என்றார்.
தொடர்ந்து  அவர் தன் பிள்ளை பாச்சாவை உரத்த குரலில் கூப்பிட்டார்.
 
”இந்த பாச்சா, மறக்காம கெட்டிச் சட்னி
வாங்கிண்டு வரணுமே”


பாச்சா வந்ததும்  "பாச்சா, ஒரு காரியம் செய்யறயாநேரே மியுசிக் அகாடமி கான்டீனுக்குப் போய் நாலு இட்லி, நாலு வடை, பொங்கல் வாங்கிண்டு வா" என்றார்.  சரி” என்று சொல்லிவிட்டு, பாச்சா கிளம்பி போய்விட்டார்.

May 05, 2013

புஷ்பா தங்கதுரையும் நானும்

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீவேணுகோபாலனை (அல்லது ஸ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரையை நான் சென்னை ஜி.பி..-வில் 50-களில் வேலைக்குச் சேர்ந்த பிறகு சந்தித்தேன். அதே அலுவலகத்தில் இருந்த அவரை சந்தித்தபோது  ஓரளவு பிரபலமான எழுத்தாளராகவே இருந்தார்,

அமுதசுரபியில் கனமான கதைகள் எழுதிவந்தார். ஒரு ரயில் எஞ்சின் டிரைவரைப் பற்றி அவர் எழுதிய கதையைப் படித்து அசந்து விட்டேன். அந்த கால கட்டத்தில் நான் ஒரு எழுத்து ரசிகன். எழுத்தாளன் ஆகும் ஆர்வமும் இருந்தது என்று சொல்லலாம். அதைவிட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் அவர்களுடைய அறிமுகம் பெறவும் அதிக ஆர்வம் இருந்தது. ஸ்ரீவேணுகோபாலன் துவக்க காலங்களில் எழுதிய கதைகளின்  நடையும் அழுத்தமும் வெகுவாகக் கவர்ந்து விட்டன. இப்படியெல்லாம் கோர்வையாக,, அழகானப் பதப்பிரயோகங்களுடன் நமக்கு எழுத வருமா என்ற அச்சம்தான் ஏற்படும். போதாதற்கு அவர் அழகான பாடல்களும் ’பூங்குயில்’ என்ற பெயரில் எழுதுவார். 

பத்திரிகைகளில் நான் எழுதவில்லையே தவிர ஜி,பி, ஓ, வில் நாடகங்கள் எழுதிப் போட்டிருக்கிறேன், ஒரு நாடகத்திற்கு பாட்டு எழுதித் தரும்படி கேட்டேன், (அவருடன் தொடர்பு வைத்திருக்க!) 
பிறகு வேறொரு நாடகத்திற்கு டான்ஸ் டைரக்டராக, அவரும், நானும்(!) சேர்ந்து பணியாற்றினோம்!
இந்த கால கட்டத்தில் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றலாகிச் சென்று விட்டேன். இருந்தாலும் கடிதத்தொடர்பு வைத்திருந்தேன்.